ஃபேஸ்புக் வாசகங்கள்

12 May 2012
Posted by ச. செந்தில் குமரன்

1) எதைத்தேன் என நான் நினைத்தேன்?

அதைதேன் என எண்ணி கவிழ்ந்தேன் ;)

2) உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே!

எனக்கு அரை மணி நேரத்தில் மரணம் என்ற நிலைவரும்பொழுது, எதனை சிந்திக்க? தாயா? தாரமா? நண்பனா? எதிரியா? தோழியா? வேசியா? சொர்கமா? நரகமா? :)

3) வீழ்வேன் என்று நினைத்தாயோ? இவ்வாழ்க்கைக்கு சொந்தக்காரன் நான் (கர்வம் தான்), என்னால் வீழ்ந்தெழ முடியும்!

4) பாரதியாய் நான் வாழ, பலநூறு தவம் கண்டு, பரதேசியாய் திரிந்தலைந்து பார்த்துவிட்டேன், இனியும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? நான் பாரதி வம்சம்!

5) நான் விந்தை மனிதன், என்னை வீழ வைத்து விட்டாய் என்ற பெறுமை மட்டும் தான் உனக்கு விஞ்சியது! வீழ்ந்தது யாரென்று எண்ணிப்பார் நீ வாழ்வதில் அற்தமில்லை என்பது விளங்கும், இங்கு நான் எழுந்தேன்.

6) எழுந்தேன் தெளிந்தேன், எதர்க்கும் துணிந்தேன் :) பாவை பற்றேன், பாரை உணர்ந்தேன்!

7) ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் தவம் இருந்தாயிற்று, தேவதைகளை வெறும் பிம்பமாக மட்டும் காண முடிந்தது, வரம் ஏதும் கிடைக்கவில்லை :(

8) கண்ணில் மை வைக்கும் பெண்களை விட, கண்ணில் மைக் (mic) வைத்திருக்கும் பெண்கள் மிக அதிகம். பார்வையாலேயே பேசி விடுகின்றனர், சில நேரம் மிரட்டவும் செய்கின்றனர் :)