ஏனோ தொலைந்தாய் மனிதா?

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
தெரிந்தே சென்று குழியில் விழுந்தாய்
உந்தன் உருவம் நீயே மறந்தாய்
ஊரார் உருவம் உன்னில் பதித்தாய்

ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
இதயம் என்னும் இலக்கம் இழந்தாய்
பார்வைக்கு ஏங்கும் பழியினை பெற்றாய்
சொல்லில்சாகும் சோகம் சுமந்தாய்

ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
எண்ணித் துணியும் எண்ணம் இழ்ந்தாய்
வாழ்வை தேடும் வாட்டம் தொலைத்தாய்
வானே எல்லை என்பதை புதைத்தாய்

ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
காதல் என்னும் கடலில் விழுந்தாய்
காலம் முழுதும் கற்பனை வளர்த்தாய்
கனவுகள் சற்று ஒதுக்கி வைத்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்!

Hi

Thanks a lot for correcting it
renuka.


Hi

Karpanai spelling wrong sir :)


நன்றி

சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி, சரி செய்து விட்டேன்.