தமிழ் பெண்ணே...

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
ஒரு பெண் என்னைத் தொட்டால் இனிமை
அவள் பெண்ணல்ல உண்மையில் புதுமை
அவள் புதுமையல்ல அவள் என் இமை
அவள் இமையல்ல அவள் என் சாதிமை

வான் மழைத்துளி எல்லாம் மண்ணுக்கே
என் உயிர்த்துளி எல்லாம் தமிழ்பெண்ணுக்கே
கடல் அலை எல்லாம் கரைகளுக்கே
என் கலை அலை எல்லாம் அவள் சலங்கைக்கே
வான் நட்சத்திரம் எல்லாம் இரவுக்கே
என் சரித்திரம் எல்லாம் தமிழ் பெண்ணுக்கே

கிழிந்த மனதை தைக்க கூந்தல் தருவாளா?
விழிநீர் துடைக்க கரங்கள் தருவாளா?
உயிரில் கலக்க உயிரைத் தருவாளா?
பெயரில் கலக்க பெயரைத் தருவாளா?

மழைநீராய் மாறவா? அவள் குடிக்கத்தான்
தென்றலில் கலக்கவா? அவள் சுவாசிக்கத்தான்
பூமியில் கிடக்கவா? அவள் நடக்கத்தான்
கடலில் அலையவா? அவளை வருடத்தான்

பெண்ணே உன்விழிக்கு அடிமையாகினேன்
கவிதையின் கழல்பணிந்து உன்னை வாழ்த்தினேன்
கண்ணே நான் கவியின் ரசிகன் உன்னை ரசித்தேன்
உன்னையே கருவாய் நினைத்து கவிதை இயற்றினேன்!


குறிப்பு: நான் எழுதிய முதல் கவிதை இது தான். இன்று தான் இக்கவிதை
சிம்மாசனத்தில் அமர்ந்தது போல் எனக்கு ஒரு மகிழ்ச்சி!