தாயே நீயின்றி!

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
கண்ணின் இமைபோல் உனையே
கடைசிவரை நானிருந்து காப்பேன்
விண்ணும் மண்ணும் சாகும்
இருவரும் பின்னும் வாழ்வோம்

காதல் கொண்டேன் உன்மேல்
சாதல் நீயின்றி சுகமே
ஈதல் நினதன்பு குணமே
ஈந்தாய் உனதன்பு மனமே

பிரம்மன் அவனது வாழ்வில்
திறமாய் செய்தது நினையே
கண்முன் கடவுளே வரினும்
உன்முன் அவரெல்லாம் சருகே

நீயின்றி வாழும் நிலமோ
நீரின்றி வாழும் நிலையே
தீயின்றி ஏது வெளிச்சம்
நீயின்றி எதற்கு சுவாசம்