வண்ண ஆடை விதவை

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
வீணர் கூடி விளக்கம் அளித்து
விதவை எனுமோர் பட்டம் புனைந்து
வண்ணப் புடவை வேண்டாம் என்று
வெள்ளைப் புடவை போதும் என்றனர்!

பாரதி கண்ட புதுமை பெண்கள்
பாரதம் முழுதும் பரவிக் கிடக்க
பாகம் பிரிக்கும் பால்நிற ஆடை
பழக்கம் இன்று வேண்டும் என்றனர்

இறைவா! மங்கலம் தரத்தான் பெண்ணைபடைத்தாய்
இன்று ஏனோ அமங்கல ஆடை
இணைந்தவன் இறுதிச் சடங்கு முடிந்ததும்
இருளைக் குறிக்க வெள்ளை நிறமோ?

கணவன் பிரிந்தது கண்ணில் இருக்க
கண்டவர் சிரிக்க மல்லிகை மறியலோ?
கண்கவர் ஆடையை விதவை அணிந்து
கண்ணாலன் சோகத்தை மறைத்து செல்லாயோ?

மனதில்(ன்) சோகத்தை மறைத்து வாழ்ந்திட
மனதை பிசையும் மரணம் கலைந்திட
மங்கை நீ இனி (மறு)மலர்ச்சி பெற்றிட
மங்கலம் தந்திடும் வண்ணம் புனைவாய்!